யூகமுடன் தம்புருவும் சுதிகள் மீட்ட உண்மையுடன் கன்னியர்கள் உவகை மீட்ட வாகையுடன் பேரிகையும் முரசும் சாட வளமுடனே துடி கொம்பு தாளம் ஓத ஆகமம்சால் கொளாநிலைச் செம் மடையில் வாழும் அன்னைபெரி யக்காண்டி ஆடீரூஞ்சல்! புன்னைபலா செந்நெலுடன் கமுகு வாழை புனித நெல்லி மஞ்சளுடன் நாக லிங்கம் தென்னைகொன்றை தேமாவும் அகிலும் சாந்தும் திருவாத்தி செண்பகமும் செழித்து வாழ்க! கன்னல் செந்நெல் கதலிஇரு வாட்சி கோங்கு கதித்துவளர் கொளாநிலையில் சிறப்புற் றோங்கும் பொன்னர் சங்கர் வில்வவனம் வாழும் தாயார் புகழ்பெரியக் காண்டி அம்மன் ஆடீரூஞ்சல்! ஜாதிமலர் மல்லி முல்லை பாரிஜாதம் சரவிளக்குப் பூச்சரங்கள் வர்ணக் கோலம் வீதியெல்லாம் தோரணங்கள் தகத்த காயம் விளங்கிடவே சூரியவானக் குடையும் சூழ நீதியதாய் டால்விருது கவரி வீச நிலமதிர வாணவெடி முழங்கி ஆர்க்க ஆதிசக்தி கொளாநிலையில் வாழும் தாயார் அன்னைபெரி யாக்காண்டி ஆடீரூஞ்சல்! பாரறிய பூந்துரைசை நாட்டில் மிக்க பதிஈரோ டருகில்செம்மை வில்வத் தோப்பில் சீரறிய வளர்தாயார் பெரியக் காண்டி செயல்கிருபை எந்நாளும் செழித்து வாழ்க! கூறரிய பாவாணர் மகிழ்ந்தே வாழ்த்தக் குவலயத்தோர் கொண்டாட வாணி சூழ்ந்த ஆறணியும் மனோன்மணியாள் வீரசக்தி அன்னைபெரி யக்காண்டி ஆடீரூஞ்சல்! | | |
|
|