அருமை மிகு பாதமலர் அடியார் போற்ற அழகுதமிழ் வாணரெலாம் பாடிப் போற்ற இருமைக்கும் செல்வமளித் தெம்மைக் காக்கும் எழில் பெரியக் காண்டி அம்மன் ஆடீரூஞ்சல்! சுதந்திரமாய்ச் சிரசினில்கி ரீடம் மின்ன சுட்டிகையும் தொடுவளையல் தோடும் மின்ன சந்திரவட்ட டத்திலகம் நெற்றி மின்ன தாழ்வடம்பொன் காசுமணி தானும் மின்ன கந்தரத்தில் சரப்பளியோடு அட்டி மின்ன கனகமணி மாலைமுத்து கனிந்து மின்ன அந்தரிபு ரந்தரியம் பிகைமா சக்தி அன்னைபெரி யக்காண்டி ஆடீரூஞ்சல்! மேன்மைமிகு மூக்குத்தி துலங்கி யாட விளங்கிடுகா தோலைகரு மணிக ளாட வன்மையுயர் கவசகுண்ட லங்க ளாட மல்லிமுல்லை இருவாட்சி மாலை யாட சென்மமுறு தொடுவளையல் கையில் ஆட திகழ்மருங்கில் பட்டாடை மின்னல் ஆட அண்மைகொளா நிலையழகு வனத்தில் வாழும் அன்னைபெரி யக்காண்டி ஆடீரூஞ்சல்! பாதரசம் சிந்தாக்கு கொலுசு மாட பனிமுடிமேல் மௌளிபத்ம பதக்கமாட தாதகன விருதுபம்பை மேள மாட தத்திதிமி யோகமெனத்தா திகளு மாட சாதகமாய் வலம்புரியின் சங்கு மாட சதுர்வேதத் தமிழ்ப் பாடல் மறையோர் பாட ஆதரவாய்க் கொளா நிலையில் வனத்தில் வாழும் அன்னைபெரி யக்காண்டி ஆடீரூஞ்சல்! நாதசுரம் துத்தாரி வீணை மீட்ட நாரதரும் கிம்புருவர் நனினம் மீட்ட | | |
|
|