முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
அண்ணன்மார் சுவாமி கதை
525
பெரியக்காண்டி அம்மன் ஊஞ்சல்
(கொளாநல்லி செம்மடைக் கோவிலில் பாடப்படுவது)
பூவுலகில் கொங்கினில்நா லாறுநாட்டில்
புகழ்பெறுமேல் பூந்துரைசை நாட்டில் ஓங்கும்
தேவுலகுக் கிணைமாரி பொழியும் பாங்கில்
செம்மடையில் வில்வவன மதிலே ஓங்கி
மூவுலகோர்க் கமுதளிகா வேரி சூழும்
முத்துமணி சோபனமே தமிழில் பாடப்
பாவுலகம் போற்றிடுமைங் கரனார் தாளே
பணிகின்றோம்! காத்தருள்க! தும்பிக் கையோன்!
பெருமைசென்னி ககைகிரி கால்கள் நாட்டி
பிரபலமாய்ச் சிவகிரியாம் விட்டம்போட்டு
பொறுமையுடன் சராசரங்கள் கொடுங்கை சேர்த்து
பொன்னி பவா னிப்புனல் சங்கிலிகள் பூட்டி
கருணையருள் மெய்ஞானப் பலகை மாட்டி
கச்சிதமாய் அலங்கரிக்கும் உண்மை சேர்த்து
அருமை வளர் செம்மடைவில் வனத்தி லோங்கும்
அன்னைபெரி யக்காண்டி ஆடீரூஞ்சல்!
கருவீர மலைகொளா நிலையோ டுற்ற
கடாட்சமுறு செம்மடைமோ ழீயப் பள்ளி
மருவளர்கொ ளாநிலையில் அருட்செங் கோலில்
வரமருளும் தாயாவாள் மகிமைக் காரி
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்