பக்கம் எண் :

மதுரை வீரன் கதை141

  
வீரனுந் தன்னுடைய
     விதிதனைத் தான் நினைந்து
ஆதிசிவன் மாயவற்கு

1795

     அபயம் என்று தான்சொல்லி
எண்ணாது எண்ணி
     இருக்கும் அந்த வேளையிலே-
 
வெள்ளையின் விருப்பு
 
அப்போது வெள்ளையரும்
     அசந்து183 நித்திரை செய்து
பார்க்கவே வீரன்
     பக்குவமாய் நின்றிருக்க
கண்ட உடனே யோசித்து!
     காரிழையும் சொல்லுகிறாள்
“நானோபதி விரதை

1800

     நன்மை அறியாமல்
தொட்டு எனைஎடுத்து
     தூக்கியே வந்ததினால்
இனிஎனக்கு நீபுருஷன்
     என்பதற்குஓர் ஐயமில்லை
கோவே இனிஉந்தன்
     கூடவே நான் வருவேன்
உன்துக்கம் என்துக்கம்
     ஒன்றல்ல வேறில்லை
ஒற்றுமையாகி

1805

     உயிரை விடுவேன் காண்!”
என்று திடமாக
     இயம்பினாள் வெள்ளையரும்
இவள்சொல்லும் சொல்கேட்டு
     இருந்தவர்கள் இப்போது
 
காவலர் கவலை:
 

ஆணிமுத்து வீரர் என்று
     அனைவோரும் தாம் அறிந்து