“உம்மை இன்னார் என்று உண்மை அறியாமல் கைகாலறுத்து விட்ட |
| 1810 |
காரணத்துக்கு என்ன செய்வோம்” என்று சொல்லி சேவகர்கள் இணங்கி வணங்கல்உற்றார் காலில் விழுந்து கதறியே அழுகலுற்றார் |
பொம்மி புலம்பல்: |
அழுத சத்தந்தான் கேட்டு ஆரணங்கு பொம்மியரும் அவரோ இவரோ அறிந்து வருவோஎன்று அன்னம் போல் நடந்து |
| 1815 |
அருகில்வந்து தான்நின்று வீரையனைத்தான் பார்த்து விம்மிவிம்மித் தான்அழுது “பாதகா நான் இதற்கோ பற்றி வந்தேன் உன்பிறகே கால்கை அறுப்புண்டிருக்க காணவோ வந்தேன் நான் எழுத்தை அறியாமல் எண்ணினேன்கோடி சிந்தை ஆண்டவனே உந்தனுக்கு |
| 1820 |
அசடு வந்தவாறுஏது மன்னவனே உந்தனையும் வழிமறிப்பார் உண்டோதான்” என்று சொல்லி பொம்மியரும் ஏங்கி வசனம்184 உற்றாள் |
வீரன் தேற்றுதல் |
| புருஷனும் வாய்திறந்து பொம்மிக்குச் சொல்லல் உற்றான் |