“ஆதிசிவன் பிரம்மா அன்புள்ள மாயனுமே கூட்டி எழுதினதை |
| 1825 |
குறைப்பாரோ பெண்அரசே! எழுத்தை அழிக்க எவரால் முடியுந்தான் சூரிய குலத்து உதித்து தோற்றமுடன் வீற்றிருந்தேன் மாறுபடாவம் மிசத்தில் வந்து பிறந்தேன் காண்! பொம்மியரே நானும் பூமியில் இறப்பதில்லை! மீனாக்ஷி பொற்பதத்தை |
| 1830 |
விருப்பமுடன் சேர்வது அன்றி அரை நொடியும் அதிகாரம் இல்லையடி!” |
பொம்மியின் செயல் |
ஆரணங்கு பொம்மி அருஞ்சேதி185 தான் கேட்டு “மன்னவனே உம்மை விட்டு மண்மேல் இருப்பதில்லை கூடவருவேன் காண் வெள்ளை கொண்ட ராசாவே” என்று சொல்லி பொம்மி |
| 1835 |
இரக்கமாய் தான் நடந்து வைகை நதியில் வனமயிலாள் ஸ்நானம் பண்ணி கூந்தலை உதறி அங்கே கோடாலி முடிதான்186 போட்டு கூறை187 உடுத்திக் கோலப்பணி பூண்டு சிவ சிவா என்று சொல்லித் திருநீறு தானு மிட்டு |