மதுரை வீரன் காசியிலே மன்னனுக்கு மகனாகப் பிறந்தான். பிறந்த பலன் படி தந்தைக்கு வேண்டாத பிள்ளையாகிக் காட்டிலே விடப்பட்டான். இழிகுல சின்னான் இவனை எடுத்து வளர்த்தான். பின்னர் பிழைப்பு கருதி பொம்மண்ண சீமைக்கு வந்தான். அங்கே மன்னன் மகளுக்கு காவல் இருக்கும் நிலை வருகிறது. காவலன் காமுகன் ஆகி காதலனாகி காவல் பொருளையே சூறையிடுகிறான். பின்னர் அங்கிருந்து காதலியோடு திருச்சிக்குள் நுழைகிறான். அங்கே அவனுக்குப் படைவீரன் வேலை கிடைக்கிறது. அங்கும் அவன் ஒரு கோட்டைக் குறிக்காரன் மகளைக் கற்பழிக்கிறான். அவளும் விரும்பியே கற்பழிகிறாள். கள்ளர் பயத்தைப் போக்க கட்டிய மனைவியுடன் பட்டாளம் கொண்டு மதுரைக்கு வருகிறான். மதுரையில் கொள்ளைக்காரர்களை அழித்தபின் இவனே தன் உள்ளம் கொள்ளை கொண்ட தாசிப்பெண் வெள்ளையம்மாளைக் கொலை செய்கிறான். அதற்குத் தண்டனையாகத்தன் கையையும் காலையும் தன் உயிரையும் இழக்கிறான். தீரன் தேவனாகிறான். தேசத்தோரால் வழிபடப்படுகிறான். இதுவே வீரன்கதை, பெயரில் மட்டுமல்ல பெற்றியிலும் இவன் வீரனே. |