இவை சமுதாயத்தில் கீழ்த்தட்டு வர்க்கங்களின் அபிலாசைகளைப் பிரதிபலிப்பதாக உள்ளதாம். பொதுவாகக் கீழ்த்தட்டு மக்களுக்குச் சமுதாய விதிகள் எல்லாம் மேல்தட்டு மக்களின் சுய லாபத்துக்காக உருவாக்கப்பட்டவை என்ற எண்ணம் உண்டு. அவற்றை உடைக்க வேண்டும் என்ற ஆவல் இருப்பினும் அவர்களுக்கு அதற்கான ஆற்றல் இருப்பதில்லை. எனவே, அவர்களில் ஒருவன், அச்சட்டங்களை உடைக்க முயலும் போது அவர்களின் ஆதரவும் அன்பும் அவனுக்குக் கிட்டுகிறது. இப்படியே மதுரை வீரன் கற்பழித்தல், கொலை செய்தல், கொள்ளை செய்தல், மாமிசம் உண்ணல், மது அருந்துதல், போன்ற கலைகளைச் செய்து, கீழ்த்தட்டு மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ளான். மதுரை மாவட்டத்தில் ஒரு வீரன் இருப்பது போலவே, திருநெல்வேலி மாவட்டத்தில ஒரு சுடலை மாடனும், தஞ்சை மாவட்டத்தில் ஒரு காத்தவராயனும், நகார்கோவிலில் ஒரு சின்னத்தம்பியும் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் பின் தங்கிய மக்களாலும் தாழ்த்தப்பட்ட மக்களாலுமே வழிபடப்படுகின்றனர். வட்டார வீரர்களாகப் புகழ்பெற்ற இவர்கள் தமிழகத்தின் ராபின்ஹு ட் (Robin Hood)கள் எனலாம். இவர்கள் இறக்கையில் வீரர் நிலையினின்றும் தேவதை நிலைக்கும், குலதெய்வம், காவல் தெய்வம், என்ற நிலைக்கும் மாறி விடுகின்றனர். அத்துடன் பெருந் தெய்வங்களுக்கு வாயில் தெய்வங்களாவும் விளங்குகின்றனர். மதுரை வீரன் மீனாட்சி அம்மன் கோவிலிலும், காத்தவராயன் மாரியம்மன் கோவிலிலும், சுடலைமாடன் பகவதி அம்மன் கோவில்களிலும் வாயில் தெய்வமாக உள்ளனர். சண்டித்தனம் எவ்வாறு மக்களை அச்சுறுத்தி அடிமை கொண்டு ஆட்டிப்படைத்தது என்பதற்கு இக்கதைகள் சான்றுகளாகும். கிராம தெய்வ வழிபாடு பெரு | | |
|
|