பக்கம் எண் :

மதுரை வீரன் கதை171

  

     தெய்வ வழிபாடுகளோடு எவ்வாறு கலந்தது என்பதற்கும் இக்கதைகள்
எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.
 
 வரலாற்றுச் செய்திகள்:
 
1. காசியை துளசிமகாராஜன் தன் மனைவிபூமாயுடன் வாழ்கிறான். இவனது காலத்தைப்
  பற்றி வரலாற்றில் சான்றில்லை.

2. பொம்மண்ணன் சீமை அங்கு உள்ளது. இதைக் குறிஞ்சிக் கோட்டை என்று மதுரை
   வீரசுவாமி உற்பத்தி பூசாரிப்பாட்டு’ என்னும் நூல் கூறுகிறது. இதையும் நாம்
   அடையாளம் கண்டு கொள்வது சிரமமான விஷயம். வரலாற்றில் இதற்கும் 
   தெளிவில்லை.

3. திருச்சியை விஜயரங்க நாயக்கன் ஆண்டபோது மதுரை வீரன் அங்கே இருக்கிறான்.
   இவனது காலம் திருமலை நாய்க்கர் காலமே.

4. திருமலை நாய்க்கரின் காலமாக ‘தமிழக வரலாறு’ என்ற நூல், கி.பி.1623-59 என்று
   கூறுகிறது. மதுரைவீரன் காலமும் இதுதான்.

5. கதை மூலமாகத் திருமலை நாய்க்கர் தன் ஆண் குழந்தைக்கு வீரன் பெயரை .
   இடுகிறார். அக்குழந்தை 1659இல் ஆட்சிக்கு வந்த முத்து வீரப்ப நாயக்கராக
   இருக்கலாம்

6. வரலாற்றுப்படி திருமலை நாயக்கர் காலம் கலகமும் கொள்ளையும் நிறைந்த
  காலம்தான்.
 
பாட பேதங்கள்:
 
1. ஒரே நேரத்தில் காசி மன்னனும் அந்நகர மாதிகச் சின்னானும் குழந்தைக்காக
  வேண்டுதல் செய்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரின் வேண்டுதலையும் ஒரே
  வரத்தின்