பக்கம் எண் :

172மதுரை வீரன் கதை

  
மூலம் தீர்க்க முனைந்தார் காசி விஸ்வநாதர். மன்னன் மனைவி குழந்தையைப் பெற
சக்கிலியன் மனைவி குழந்தையை வளர்க்குமாறு விதி செய்தார். அவ்வாறே நடந்தது.
நம் கதையில் இச்செயல் இல்லை.

2. மன்னன் பெயர் செயதுங்கராஜன், மகாராணி பெயர் பவானி, நம் கதையில் 
  இவ்வாறில்லை.
3. மன்னன் ஊசி முனையில் குழந்தைக்காகத் தவம் செய்தான். நம் கதையில் இது
  இல்லை.
4. சம்பாகிறான் நாட்டில், சௌராஷ்டிரபுரம் எனும் நகரம். அதை நிகல சக்கரவர்த்தி
   தன் மனைவியுடன் அரசாண்டான். ஒரு நாட்டுக்குச் சென்றபோது மனைவியும்
   உடன் இருந்தாள். மனைவி ஒரு மானைக் கண்டு கேட்டாள். மன்னன் மான் மீது
   அம்பெய்தான். அம்பு தவசிருந்த முனிவர் காலில் பட்டது. மானின் இறைச்சியும்
   முனிவர் காலில் பட்டது. முனிவர் கோபம் சாபத்தில் முடிந்தது. சாபப்படி இருவரும்
   சக்கிலியன் சக்கிலிச்சியாகக் காசி நகரில் பிறந்தனர். நம் கதையில் இது இல்லை.

     இத்தகைய பேதங்கள் என்னிடமுள்ள ‘மதுரை வீரன் கதைப்’ பிரதியில் உள்ளது.
இதனை எனக்குத் திருநெல்வேலி மயிலேறி புலவர் கொடுத்தார். இப்பிரதியில் மதுரை
வீரன் பிறப்பு வரை மட்டுமே உள்ளது.

     ‘மதுரை வீர சுவாமி உற்பத்தி பூசாரிப் பாட்டு என்னும்நூல் பூசாரி ம.சக்திவேல்
செட்டியார் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இதிலும் பல பேதங்கள் உள.

1. குழந்தையை காட்டிலேவிட வந்தபோது மாயஅவதாரன் ஆன திருமால் ஒரு
  மாமரமாகவும் இலக்குமி தேன்கூடு போலவும் வடிவெடுத்தனர். குழந்தை மரத்தடியில்
  வைக்கப்பட்டது. மாகாளி நாகம் வடிவு எடுத்தாள். குழந்தையை காத்து வந்தாள், நம்
  கதையில் இவ்வாறில்லை,