பக்கம் எண் :

மதுரை வீரன் கதை173

  

2. காளியே சச்கிலியன் மனைவியின் கனவில் தோன்றி குழந்தையைப் பற்றி கூறுகிறாள்.
நம் கதையில் இது இல்லை.

3. வீரன் சிறுவயதில் அறுபதடி வேங்கையொன்றின் ஆற்றலை அடக்குகின்றான். நம்
கதையில் இது இல்லை.

4. காளியம்மாள் வீரனுக்கு அவனது வரலாறு முழுவதையும் உரைக்கின்றாள்,
ஐந்தெழுத்து மந்திரத்தை உரைக்கின்றாள். நினைத்த பொழுதில் வருவேன் என்று உறுதி
கூறுகிறாள்.

5. காசி மன்னன் ஒருநாள் வேட்டைக்கு வருகிறான். அறுபதடி வேங்கை அவனைக்
கொல்ல வருகிறது. வீரன் மன்னனைக் காப்பாற்றுகிறான். அரசனும் அமைச்சனும்
அவனைப் பற்றி யோசனை செய்கின்றனர். அவனைப் பின் தொடர ஒற்றரை அனுப்ப
ஒற்றர் உண்மையை உரைக்க மன்னன் மாதிகனை வரவழைத்தான். அவனை அரசன்
விசாரணை செய்தான். மறுநாள் வீரனை அரசவைக்கு அழைத்து வர ஆணையிடுகிறான்.
எனவே அச்சமுற்று மாதிகன் ஊர் விட்டு போகிறான்; இது நம் கதையில் இல்லை.

6. பொம்மி பூவைப்பருவம் அடைந்ததும் சோதிடர்கள் பலன் பார்த்தனர். முப்பதுநாள்
பொம்மி அரண்மனையில் இருக்கக் கூடாது என்றும், அவள் அதற்குள் சோரம் போய்
விடுவாள் என்றும் எச்சரித்தார்கள். எனவே அரசன் அவளைக் குடிசையில் வைத்தான்.
அரசரையோ. அந்தணரையோ, வணிகரையோ காவலுக்கு வைத்தால், அவர்கள்
பொம்மியைக் கெடுத்து விடலாம் என்று அஞ்சி சக்கிலியனைக் காவல் வைக்கிறான்.
நம்கதை இவ்வாறில்லை,

7. சக்கிலியன் காவல் செய்கையில் காளி வந்து மகனுக்கு ஆபத்து என்று உரைக்கிறாள்.
எனவே வீட்டிற்கு வரு