இவர் திருநெல்வேலி மாவட்டைத்தைச் சேர்ந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில்
நாட்டுப்புறப் பாடல்களில் டாக்டர் ந.சஞ்சீவியின் மாணவராக, ஆராய்ச்சி செய்து டாக்டர்
பட்டம் பெற்றவர். பெங்களூர் தூய ஜோசப் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணி
புரிகிறவர்.
நாட்டுப்புற இலக்கியத்தில் பல நூல்களை எழுதியுள்ளவர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட
பாடல்களையும், கதைகளையும், கதைப் பாடல்களையும் சேகரித்துள்ளவர், சேகரித்தும்
வருபவர்.
இவர் படைப்பிலக்கியத்தில் ‘சுந்தர பாண்டியனா‘கக் கவிதைகளையும், கதைகளையும்
உருவாக்கி வருபவர்.