திக்கெட்டுங் கீர்த்தி செலுத்தும் செங்கோல் வேந்தே! தக்க தவம் புரிந்து |
| 335 |
தான் பெற்ற பிள்ளையது சனனம் எடுத்ததினம் தாரணிக்கே ஆகாது கனமான பொல்லாங்கு காசி நகர்க் கெய்து விடும் நாளும் கோளும் பிறந்த நாட்டுக்கே ஆகாது. மீளும் பெரும் போரும் மிகச் சிறிய பிள்ளையினால் குழந்தையை வைத்திருந்தால் |
| 340 |
| கோத்திரற்கு ஆகாது இழந்திடுவீர் நாடு நகர் இக் குழந்தை தன்னாலே அருமகனை வைத்திருந்தால் அரண்மனைகள் வெந்து விடும்” என்று மிகவுரைத்தார் எழிலான சோதிடரும்! குன்றி வயிறு எரிந்து கோப மிகக் கொண்ட அரசன் |
மன்னனது துயரம் |
| அந்த மொழி கேட்டே |
| 345 |
அலறித்தான் விழுந்தார். சிந்தை தளர்ந்து தியங்கி மதி மயங்கி “அப்பா மகனே” என்று அபயமிட்டுத் தான்புலம்பி “எப்படி என் செய்வேன் இனி பிழைக்கேன்” என்று சொல்லி |