பக்கம் எண் :

42மதுரை வீரன் கதை

  
நீதிதவறா அமைச்சர்

320

     நிருபனார்55 சொல் படிக்கு
சோதிடரைத் தான் அழைத்தான்
     சோதிடரும் ஓடிவந்து
ஆசிஉரைத்து மஞ்சள்
     அட்சதைவேந்தர்க்கு அளித்தார்
மன்னன் மணி ஆசனத்தை
     மறையோர்க்குத் தான் கொடுத்தார்
“என்னை அழைத்த விதம்

325

     என்னவென்றார்” சோதிடரும்

மன்னன் மொழிந்தது:
 

அந்த மொழி கேட்டே
     அரசன் விளம்பலுற்றான்-
“வெள்ளிக் கிழமை தனில்
     விடிந்து பத்து நாழிகையில்
வள்ளல் கழுத்திலே
     மாலை சுற்றிதான் பிறந்தான்
திதிகரணம் வாரம்
     சிறந்த யோக மிவைநாள்56
திதி57 அறிந்து பஞ்சாங்கம்
     சாஸ்திரத்தைப் பாடு” என்றார்
அப்படியே சோதிட நூல்

    330

     அந்தணர் தான் பார்த்து
 
சோதிடர் சொன்னது:
 
செப்பரு நாளு திங்கள்
     திதி வாரத் தீங்கெனவே
சோதித்து அறிந்த பின்பு
     துளசி மகாராஜனும்
போதிக்கச் சோதிடரும்
     பேசத் தொடங்கல் உற்றார்