பக்கம் எண் :

6மதுரை வீரன் கதை

  

காசி காண்டம்


     காசி என்னும் நகரம் உலகமக்கள் போற்றும் உயர்வான நகரம். தேசமக்கள்
விரைந்து வந்து வழிபடும் தெய்வீகமான நகரம். பொன் மதிள்களும், பொன்னால் ஆன
மாடமாளிகைகளும், கோவில் கோபுரங்களும், மன்னர்கள் தங்கும் மண்டபங்களும்
நிறைந்த நகரம். அரசர், அந்தணர் வணிகர் வேளாளர் ஆகியோர் வாழும் வீதிகளும்,
வேழியர் வாழும் வீதிகளும் இந்நகரில் உண்டு. வீரர்களின் சிறந்த காவல் உடையது
இந்நகரம். அறிஞர் அவைகளும், பந்தடிக்கும் மேடைகளும். சங்கங்களும், சாலைகளும்,
சபைகளும் இந்நகரில் நிறைந்ததுள்ளன.

     இந்நகரைத் துளசி மகாராஜன் ஆண்டு வந்தான். இவன் பொறுமையில் பூமியைப்
போன்றவன். மன்மதனைப்போன்ற அழகும், அரிச்சந்திரனைப் போன்ற வாய்மையும்,
கர்ணனைப் போன்ற கொடையும் வேல்முருகனைப் போன்ற வீரமும், தசரதனைப்
போன்ற நீதி நேர்மையும் கொண்டவன். இவன் சிறந்த முறையில் இந்நகரை
ஆண்டனன்.

     ஒருநாள் இவன் அவையில் கொலு இருந்தான். பெண்டிர் ஆலவட்டம் இட்டனர்.
வெண்சாமரைகளை வீசினர்; கும்பம் எடுத்தனர்; ஆரத்தி காட்டினர். மறையவர்கள்
வாழ்த்து கூறினர். கன்னியர் ஆடினர். சிலர் விருது கூறினர். படை வீரர்கள் நெருங்கி
நின்றனர். இசைக்கருவிகள் பறவைகளாய் பண்ணுமிழ்ந்தன. புலவர்கள் பாடினர்.
சிற்றரசர்கள் சூழ்ந்து இருந்தனர்.

     மன்னனது மணிமுடி சூரிய மண்டலமாக விளங்கியது. அவனது கணையாழி
கடலாகத் தோற்றம் தந்தது: வாகுவலயம் வானுலகாய்க் காட்சியளித்தது. வைரமணி
உலகை விலை பேசியது; மார்பு பதக்கம் நிலவொளியைத் தந்தது.

     சிற்றரசர்கள் திறை தந்தனர். மன்னன் வறியவர்க்குத் தானம் தந்தனன்.
குறைவில்லா கோமகன் அவன் என்றாலும், அவனுக்கு ஒரு குறை; ஒரே ஒரு குறை