தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


காமம் மிக்கவன். வீரனும் அவ்வாறே. கோவலன் கள்ளன் என்று தண்டிக்கப்பட்டான். வீரனும் அவ்வாறே. கோவலன் இறுதியில் மௌனமாக இருந்தான். அவளது மௌனம் வாதமாகி இருந்தால் தப்பித்து இருக்கலாம். வீரனும் மௌனத்தைக் கலைத்து இருந்தால் உயிர் பிழைத்து இருக்கலாம். கோவலனை ஊழ்வினைத் தூண்டியது, வீரனையும் விதியே தண்டித்தது. கோவலனுக்குக் கண்ணகியும், மாதவியும் வீரனுக்குப் பொம்மியும் வெள்ளையம்மாளும் கண்ணகி மதுரையை எரித்தாள் காரணம் கணவனுக்குத் தீங்கு இழைக்கப்பட்டது எனக் கருதினாள். பொம்மி மதுரையை எரிக்கவில்லை. எனவே உடன்கட்டை ஏறுகிறாள். மாதவி தாசிகுலம். வெள்ளையம்மாளோ தாதிகுலம். தாசி கற்புடையவள் ஆனாள். தாதியோ தன்னைத் தொட்ட ஒரே காரணத்துக்காக கற்புக்கரசி ஆனாள். மாதவி மகளுக்காக வாழ்ந்தாள், வெள்ளையம்மாளோ கணவனோடு உடன்கட்டை ஏறுகிறாள். மதுரைக் காண்டம் ஒரு கொலைக் காண்டம். பாண்டியன் தீர விசாரிக்காமல் கோவலனைத் தண்டித்தான். நாயக்கனும் அப்படியே. மதுரையின் சிம்மாசன மகிமையே அப்படித்தான் போலும். கோவலனால் மதுரை அழிந்தது. வீரனால் வாழ்ந்தது; வயம் பெற்றது. கோவலன் அவல வீரன். வீரனோ மாயஜாலன். இப்படி எவ்வளவோ கூறலாம்)

கதைப் பாடல்களையும் கவனித்து வரவேண்டும் என எனக்கு ஊக்கமளித்து என் ஆராய்ச்சி மேற் பார்வையாளார் டாக்டர் ந.சஞ்சீவி அவர்களுக்கு என் நன்றிகள். இந்நூல் வெளியிட முன் வந்துள்ள பூம்புகார் பிரசுரத்திற்கும்.

இறுதியாக, என் இன்பதுன்பங்களில் பங்கு கொள்வது போலவே என் எழுத்துப் பணியிலும் பங்கு கொண்டு இந்நூல் எழுதவும் துணைபுரிந்த என் இனிய பாரிலெட்சுமியையும் நினைவு கூர்கிறேன்.

பெங்களூர்,
1-4-73

அன்பன்,
சு.சண்முகசுந்தரம்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-10-2019 12:47:47(இந்திய நேரம்)