தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  

முன்னுரை

மதுரை வீரன் ஒரு மாபெரும் வீரன். காசியிலே பிறந்து, பொம்மண சீமையிலே வளர்ந்து, திருச்சியிலே புகழ்பெற்று, மதுரையிலே தெய்வமாகிறான். மதுரையில் தெய்வமானதால்தான் வீரன் மதுரை வீரன் ஆகிறான்.

வீரன், விவேகம், ஆற்றல், அஞ்சாநெஞ்சம் ஆகியவை இவனிடம் இருப்பது போலவே காமம், கொள்ளை, கொலை ஆகிய தீய பண்புகளும் இவனிடம் உள்ளன. சரித்திர வீரனான இவன் இது போன்ற தீய பண்புகளாலேயே குட்டி தேவதையாக மாறுகிறான்.

மதுரை என்றதும் பொதுவாக மதுரை வீரனைத்தான் நினைவுக்கு வரும். மதுரை வீரனின் புகழை சமீப காலங்களில் பரப்பிய பெருமை திரைப்படத்தைச் சாரும். எனினும் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மதுரை வீரனைக் கதைப் பாடல்களும், வில்லுப் பாடல்களும் கூற்றுப் பாடல்களும் பூசாரிப் பாடல்களும், கோலாட்டப் பாடல்களும் புகழ் பாடி வருகின்றன. இவனுக்கு மதுரை பொற்றாமரை குளத்தின் அருகில் சமாதியும். மதுரையின் தெரு தோறும் சிலைகளும் இருந்து இவனை நினைவூட்டினாலும் மதுரை வீரனுக்கு நாட்டுப்புறக் கதைப் பாடல்களே நல்ல நினைவுச் சின்னங்கள்.

மதுரை வீரனைப் பற்றிய வரலாற்று நூல்கள் எதுவும் கிட்டவில்லை. இவனைப் பற்றி ஒரு நூல் எழுத வேண்டும் என்ற ஆசை எனக்கு நெடுங்காலமாக உண்டு.

மதுரை வீரன் கதையைத் திருந்திய முறையில் நான் பதிப்பித்துள்ளேன். படிப்பதற்கு ஏதுவாகப் பதம் பிரித்துள்ளேன். கதையோட்டத்திற்குத் துணையாகப் பத்திகளைப் பிரித்து தலைப்புகளை இட்டுள்ளேன். அத்துடன் இதனை நான்கு காண்டங்களாக, காசிக்காண்டம், பொம்மிக்காண்டம், திருச்சிக்காண்டம், மதுரைக் காண்டம் எனப் பகுத்துள்ளேன்.

கோவலன் புகாரிலே பிறந்தவன். பிழைப்புக்காக மதுரை வருகிறான். வீரனும் காசியில் பிறந்து வேலை காரணமாக மதுரை வருகிறான். கோவலனும் பெண்

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 13:42:26(இந்திய நேரம்)