பக்கம் எண் :

காற்றாடியால் காயம் பட்டவர்

63


அவர் திரு.வி.க.வுக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவர் ஒரு முறை சென்னைக்கு
வந்திருந்தார். அப்போது திரு.வி.க.வைப் பார்த்தார். “நான் நாளை கல்கத்தாவுக்குப்
போகிறேன். அங்கு எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் இருக்கிறார். அவரிடம் சென்று ஒரு
பெரிய ‘ஆபரேஷன்’ செய்துகொள்ள வேண்டும்” என்றார்.

     உடனே திரு.வி.க. “இதற்காகவா நீங்கள் கல்கத்தா போகிறீர்கள்? இங்கேயே பல
கைதேர்ந்த டாக்டர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் ‘ஆபரேஷன்’ செய்து
கொள்ளலாமே! டாக்டர் ரங்காச்சாரியாரைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்குமே !
அவர் பெரிய நிபுணர் !  எனக்கு மிகவும் வேண்டியவர் அவரிடம் நான் உங்களை
அழைத்துச் செல்லுகிறேன்” என்றார்.

     ஆனால், அந்த வங்காளச் சாமியார் இசையவில்லை. கல்கத்தாவுக்கே
போகவேண்டுமென்று கூறினார். திரு.வி.க. பலமுறை வற்புறுத்தியும் பயனில்லை.

     கடைசியில் திரு.வி.க. “உங்களுக்கு டாக்டர் ரங்காச்சாரி மீது நம்பிக்கை இல்லையா?
அல்லது, என் பேச்சில் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார்.

     அதற்கு அந்தச் சாமியார், “அப்படி ஒன்றும், இல்லை. என் தாய்மொழி வேறு,
உங்கள் டாக்டர்களின் தாய்மொழி வேறு. எனக்கு வங்காளியும் ஆங்கிலமும்தான் தெரியும்.
அவர்களுடன் நான் வங்காளியில் பேசினால், அவர்களுக்குப் புரியாது.