பக்கம் எண் :

64

பெரியோர் வாழ்விலே


ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும். நான் இப்போது நன்றாகத்தான் ஆங்கிலத்தில்
பேசுகிறேன். ஆனால், ‘ஆபரேஷன்’ செய்துகொள்ளும் சமயம் ஒருவேளை நான் நினைவு
இழந்து விடக்கூடும். அப்போது எனக்கு அந்நிய மொழியாகிய ஆங்கிலம் பேச வருமோ,
வராதோ !  அப்போது நான் என் சொந்த மொழியாகிய வங்காளியில்தான் பேசுவேன்.
நான் பேசுவது என்ன என்பதை வங்காளி தெரிந்த டாக்டராயிருந்தால், எளிதில் புரிந்து
கொள்வார். இங்குள்ள டாக்டர்களால் புரிந்து கொள்ள முடியுமா? அதனால்தான் நான்
கல்கத்தா போகவேண்டும் என்று சொல்கிறேன்” என்றார்.

     - இந்த நிகழ்ச்சியைத் திரு.வி.க. அந்த இளைஞரிடம் கூறிவிட்டு, “பார்த்தீர்களா,
தாய்மொழியின் பெருமையை !  ஆபத்துக்கு உதவுவது அந்நிய மொழியன்று ; 
தாய்மொழிதான்” என்றார். மறுவிநாடி, “அடடே, இப்போது நான் கூறிய நிகழ்ச்சியை நான்
எழுதிய ‘வாழ்க்கைக் குறிப்புக்கள்’ என்ற புத்தகத்தில் சேர்க்க மறந்து போனேனே!”
என்றார்.

     ஆயினும், அந்த அரிய நிகழ்ச்சியை நம்மால் மறக்க முடியுமா?

(திரு.வி.க.)