பக்கம் எண் :

29

திராட்சைப் பழம்

      திராட்சைப் பழம் - நல்ல
    திராட்சைப் பழம்.
    தின்னதின்ன இனிமை யான
    திராட்சைப் பழம்.

கொத்துக் கொத்தாய் இருக்குமாம்.
    கொடியில் மேலே தொங்குமாம்.
அத்த னையும் பறிக்கவே
    ஆசை யாக இருக்குமாம்.

    திராட்சைப் பழம் - நல்ல
    திராட்சைப் பழம்.

காற்றில் ஆடி அசையுமாம்.
    கற்கண் டைப்போல் இனிக்குமாம்.
பார்க்கப் பார்க்க, எட்டியே
    பறித்துத் தின்னத் தூண்டுமாம்.

    திராட்சைப் பழம் - நல்ல
    திராட்சைப் பழம்.