“இருப்பினும் அழிந்தவை இன்தமிழ்ப் பாட்டே நட்டமும் நமக்”கென நவின்றனர் சமணர்; “ஆமாம் உண்மை அறிந்திலோம் முன்னாள் சமயப் போரிற் சாய்த்தனம் பலநூல் கட்சி சமயம் கடந்தது தாய்மொழி எச்சார் பினர்க்கும் இருந்திடத் தருவது மொழியுணர் வொன்றே, முன்னுதல் வேண்டும்” என்றனர்; மற்றவர் “இவ்வுணர் வந்நாள் ஒன்றிடின் உயரிய நூலெலாம் நிலைக்கும் கூத்தும் இசையும் கூறிய நூல்கள் வேத்தவை விரும்பிட விறல்படப் பாடிய கருவூ லங்கள் எத்தனை காண்கிலேம்! எங்கே எங்கே எம்முடைச் செல்வம்? இனவுணர் வின்றி இடையில் வந்தவை மனமதில் நிலைத்தல் மாண்பிலை” என்றனர்; பள்ளி எழுச்சி பாடினள் பாவை துள்ளி எழுந்தேன் துயிலுங் கலைந்ததே! 41 |