அரியணை தமிழுக் கென்றே அரசினர் புகன்றா ரேனும் புரிமொழி என்று சொல்லிப் பிறமொழி புகுத்தல் காணின் சரிஎன ஒப்பேல்! தக்க சான்றவர் புலத்தால் ஆய்ந்த முறையினால் கலைச்சொல் ஆக்க முனைந்திடச் செய்தல் வேண்டும் அரியணை ஏற்றி வைத்த அரசுக்கு நன்றி சொல்லித் திருமண நிகழ்ச்சி யாவும் தெளிதமிழ் கேட்கச் செய்வீர்! இறைமுனும் தமிழே கேட்க இணைந்துநீர் தொண்டு செய்வீர்! துறைதொறும் தமிழே காணின் தூய்தமிழ் ஆட்சி என்போம் 5 |