6. சான்றோர் உலகம் *மனத் தூய்மை எண்சீர் விருத்தம் நினைக்கின்ற உளத்தாலும் அவ்வெண் ணத்தால் நிகழ்கின்ற சொல்லாலும் செயலி னாலும் அனைத்தாலும் மாசின்றி இருத்தல் ஒன்றே அறமாகும்; அழகுதரும் தூய்மை யாகும்; தினைத்தேனும் தூய்மையின்றிச் செய்யும் சேவை, திருக்கோவில் பலஎழுப்பல் வீணே யாகும்; மனத்துக்கண் மாசின்மை அறமென் றோதும் மறைமொழியை வள்ளுவனை மறத்தல் வேண்டா துப்பாக்கி கொலைக்கருவி அகழி கோட்டை துணைநின்று காக்கின்ற பொருள்கள் ஆகா தப்பாக்கிப் பகைசெய்யும்; மனத்தின் தூய்மை தற்காப்புப் படையாகும்; அன்பு சேர்க்கும்; எப்பார்க்கும் நல்லவனாம் பெரியோன் காந்தி இக்கருத்தை எடுத்துரைத்துச் செயலிற் காட்டிச் செப்பரிய புகழ்காத்து மக்கள் எல்லாம் செம்மைநெறி செல்லவழி காட்டி நின்றான் அழுக்காறு வெகுளியவா தீய சொற்கள் அழித்தொழித்துக் கனிவுடைய அன்பி னின்றும் வழுக்காது செல்கின்ற நெஞ்சம் கொண்டோர் வாழ்கின்ற நாட்டினையே அறிவு மிக்கோர் இழுக்கில்லா நாகரிக நாடாம் என்பர், இந்நாட்டைப் பிறநாட்டார் புகழ்தல் எல்லாம் |