136 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
ஒழுக்கத்தால் உயர்காந்தி தூய வாழ்க்கை உண்மையினால் அன்றோநீர் உணர்தல் வேண்டும் என்றென்றும் கெடுவதிலை தூய்மை யுள்ளோன் இறந்தாலும் புகழொன்று நிலைத்து நிற்கும்; அன்றிருந்த தமிழருளம் தூய்மை மேவி அன்பொழுக்கம் அமைந்திருந்த ஒன்றா லன்றோ இன்றுபல துறைகளிலும் அடிமை யாகி இருந்தாலும் தமிழகத்தின் சீர்த்தி மட்டும் நின்றிருக்கக் காண்கின்றோம்; ஆத லால்நாம் நிலைபெற்ற தூய்மைபெற்று வாழ்தல் வேண்டும். 4
* இப்பாடல்கள் முழுமையும், சாகத்திய அகாடமியால் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. |