பக்கம் எண் :

142கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

உழைப்பவர்க்கே உரித்தாய பொங்கல் நாளில்
    உயர்தமிழைத் தமிழினத்தை ஓங்கச் செய்ய
உழைப்பதற்கே உரம்பெற்று வாழ்க! என்றென்
    றுமையின்று முழுமனத்தால் வாழ்த்து கின்றேன்
குழைத்தெடுத்த தேன்பொங்கல் உண்ணும் போழ்து
    கூறுகின்றேன் வாழ்த்துரையை மயிலை முத்தே!
மழைத்துளியால் வளர்பயிர்போல் நும்மு ழைப்பால்
    வாழ்கதமிழ் ஆட்சிபெற்று வாழ்க! வாழ்க! 7

(பேராசிரியர் மயிலை. சிவமுத்து அவர்களின் மணி விழாவுக்காகப் பாடப் பெற்ற பாடல்)