102 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
70 வறுமைப் பிணி - எடுப்பு வறுமை எனும் பிணியே - கொடிதே வறுமை எனும் பிணியே -வறுமை தொடுப்பு சிறுமைகள் வந்திடச் சிந்தையும் நொந்திடத் தீமைகள் தந்திடும் தீரமும் சிந்திடும் -வறுமை முடிப்பு புல்லரைப் பெரிதாப் போற்றுவர் பொன்னால் பொருளிலை என்றால் புகழிலை இந்நாள் கல்லறைப் பிணமும் காசென்று சொன்னால் கணத்தினில் பேசிடும் காரணம் என்னோ? -வறுமை கோடையில் காய்ந்த குளம்போல் வாழ்வு குன்றிடும் அந்தோ கொடிதிந்தத் தாழ்வு மூடிடும் வீட்டில் முந்துற ஓடி முட்டவிடும் பணமே வாழ்வின் உயிர்நாடி -வறுமை |