69 அத்தர் விற்போன் - எடுப்பு அத்தர் விற்று வருவோனின் தொல்லை - அப்பப்பா அவன் கையில் அகப்பட்டார் தப்பிடுவதில்லை-அத்தர் முடிப்பு பூசுவது நம்முடலில் ஒன்று - சின்ன போத்தலில் அடைத்துக் கொடுப்பது மற்றொன்று காசுவரும் படிஒன்றே நோக்கம் - குழைந்து கனியமிகப் பேசிடுவான் கண்டபலன் ஏக்கம்-அத்தர் தடவுவான் மற்றொன்றெ டுத்தே - என்ன தடுத்தாலும் தாளிற்சு ருட்டிக் கொடுத்தே தடவுவான் நம்தலையைப் பார்த்து - வேறு தப்பவழி இல்லையென நாமிருப்போம் வேர்த்து -அத்தர் ஆரீவர் இப்பொருளைப் போலே - பூசும் ஆடைமணக் கும்அடடா ஐந்தாறு நாளே பாரீசுச் சரக்கொன்றி ருக்கு - நல்ல பம்பாய்ச் சரக்கிங்கி லாந்துச்ச ரக்கு- அத்தர் என்று பல தேயத்தைச் சொல்வான் - நம்மை எப்படியும் வாய்திறக்க ஒட்டாமல் வெல்வான் ஒன்றேனும் உண்மையோ என்று - பார்த்தால் உள்ளூர்ச் சரக்கென்று தெரியுமே நன்று-அத்தர் |