பக்கம் எண் :

104கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

எத்துயர் ஆகினும் விட்டுயிர் போகினும்
ஏற்றிடும் கொள்கையர் வாழ்வினை வாட்டும்
மெத்தையில் சாய்ந்தவர் மேனிமி னுக்கியர்
மேடையில் வாழ்பவர்க் கின்பங்கள் ஊட்டும்

-விளம்பர

மல்லிகை யாகிய நன்மலர் தாமவை
மாபெரும் விளம்பரம் இல்லெனில் வீழும்
புல்லிய கள்ளியிற் பூத்தவை யாகினும்
பூமியில் விளம்பரம் உண்டெனில் வாழும்

-விளம்பர

மருள்படு சிந்தையர் மயங்கிய நெஞ்சினர்
மதியைம றந்தவர் இங்குளர் என்றால்
இருள்பக லாகிடும் பகலிர வாகிடும்
எதனையும் நம்புவர் விளம்பரம் ஒன்றால்

-விளம்பர