பக்கம் எண் :

காவியப் பாவை105

72
பல்கலைக் கழகம்

-
எடுப்பு

பல்கலைக் கழகம் பார் - அண்ணாமலைப்
பல்கலைக் கழகம் பார்

தொடுப்பு

கல்வியில் பெரியோர் கலைபல பயின்றோர்
கருத்துடன் வளர்த்திட விருப்புடன் உழைத்திடும்

-பல்கலை

முடிப்பு

இசையொடு வீணையும் இசைத்திடும் ஒருபால்
இலக்கிய ஆய்வுகள் நடத்திடும் ஒருபால்
வசையிலாச் சொல்லமர் முழங்கிடும் ஒருபால்
வாரிவாரிக் கல்வி வழங்கிடும் ஒருபால்

-பல்கலை

சிலைக்கோவில் மேவுமொரு தில்லைப் பதியருகில்
திருவேட் களவனத்தைச் சீராக்கி ஊராக்கிக்
கலைக்கோயில் தமிழ்மொழிக்கே காணுமொரு வேட்கையினால்
கருணைமிகு வணிகர்குல மன்னனவன் எழுப்பியருள்

-பல்கலை