106 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
73 என்ன செய்து விட்டாய்? - எடுப்பு எதனைச் செய்தே உயர்ந்துவிட்டாய் - நீதான் எதனால் உலகிற் சிறந்துவிட்டாய்?-எதனை தொடுப்பு இதயம் ஒன்றை மறந்துவிட்டாய் - கண்கள் இருந்தும் ஒளியைத் துறந்துவிட்டாய்-எதனை முடிப்பு சிரிக்கத் தெரிந்தும் மறைத்துவைத்தாய் - நீயே சிந்தையில் அன்பைக் குறைத்துவைத்தாய் திறக்குங் கதவை அடைத்துவைத்தாய் - நெஞ்சில் தீமைகள் யாவும் படைத்து வைத்தாய்-எதனை எதனால் நீதான் செருக்கடைந்தாய்? - உள்ளம் இல்லை அதனால் உருக்குலைந்தாய் உதவும் நினைவை இழந்துவிட்டாய் - வீணில் உடலால் சுமைபோல் வளர்ந்துவிட்டாய்-எதனை பள்ளியில் எல்லாம் படித்துவிட்டாய் - ஆனால் படித்ததை அங்கே முடித்துவிட்டாய் தெள்ளிய அறிவைக் கெடுத்துவிட்டாய் - அதனைத் தீமைக் கெனவே கொடுத்துவிட்டாய்-எதனை |