பக்கம் எண் :

காவியப் பாவை111

தேடும் பொருள்பழு தாகலாம் - பின்னர்த்
    தேடின் அதுநிறை வாகலாம்
கூடும் மனம்பழு தாகுமேல் - எந்தக்
    கொம்பனும் மீண்டிடல் ஆகுமோ?

வானம் வறண்டிடும் போதிலும் - தோண்ட
    வந்திடும் நீரினால் வாழலாம்
மானம் வறண்டிட நேருமேல் - எந்த
    மாந்தனும் வாழ்ந்திட லாகுமோ?

செல்லும் வழிதடு மாறலாம் - மீண்டும்
    செல்ல நினைத்தஊர் சேரலாம்
நல்ல நடைதடு மாறுமேல் - இந்த
    நானில மேபழி கூறுமே