| பாடுங்குயில் (பாடல்கள்) | 115 |
குயிலின் குரல் கவிஞனைப் பித்தனென்றும், பிழைக்கத் தெரியாதவனென்றும் உலகம் பேசுவது செவியில் விழத்தான் செய்கிறது. கவிஞன், தான் என்ற எண்ணமற்றவன்.தனக்கு என்ற ஆசையற்றவன். சுருங்கக் கூறின் தன்னை மறந்தவன், ஆதலின் அவன் செயல், அவன் பேச்சு, அவன் போக்கு, அவன் பார்வை அனைத்தும் ஏனைய மாந்தரினும் மாறுபட்டுத் தோன்றும். மாறுபட்ட இக்காட்சியால் அவன் பித்தனாகிறான்; பிழைக்கத் தெரியாதவனும் ஆகிறான். அவன் உலகமே தனிஉலகம்! இயற்கை எழில் காணுங்கால் இன்பம் பெறுகிறான். மற்றவர் துயரப்படுங்கால் துன்பமடைகிறான். கொடுமைகள் காணும்பொழுதெல்லாம் குமுறி எழுகின்றான். இவ்வாறு இன்பம், துன்பம், குமுறல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுப் பொங்கியெழும் அவ்வுணர்ச்சிகளை வெளிக்காட்டக் குரல் கொடுக்கிறான். அக்குரல்தான் கவிதையென்று உலகத்தாற் கொண்டாடப் பெறுகின்றது. உலகச் சூழ்நிலைகள், அவனுடைய உள்ளுணச்சிகளைக் கிளறிவிட்டு. நெஞ்சத்திலே கொந்தளிப்புகளை அலை மோத விட்டு, அவனைப் புலம்ப விடுகின்றன. அந்தப் புலம்பலைக் கேட்டு உலகம் மகிழ்கிறது. தன் மகிழ்ச்சிக்காக உலகம் அவனை மீண்டும் மீண்டும் புலம்ப விட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆனால் அவன் மண்ணிற்புதைந்துவிட்டாலோ அவனுக்காக உலகம் புலம்புகிறது. அப்புலம்பலை ஒலிபெருக்கி வைத்துப் பரப்பவும் செய்கிறது. நல்ல உலகமடா இது! போகட்டும்; நாட்டுச் சூழ்நிலை, வீட்டுச்சூழ்நிலை இவற்றின் தாக்குதல் களுக்கு இலக்கான என் மனத்திலும் பல்வேறு உணர்ச்சிகள் தோன்றின. உறுத்திக் கொண்டேயிருந்த அந்த |