பக்கம் எண் :

116கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

உணர்ச்சிகள் நேரம்வாய்க்கும் பொழுது பாடல்களாக வெளிப்பட்டன.

அப்பாடல்கள் மெல்லிசைப்பாடல்கள். ஆம்; புது முறைப் பாடல்கள். ஆயினும் தாளம் தப்பாதவை; ஒரு கட்டுக் கோப்புக்குள் அடங்கி நடப்பவை. செவி சாய்த்துக் கேட்டுப்பாருங்கள். அவ்வுண்மை புலனாகும்.

கற்பனை வளமும், பொருள் நலமும் செறிய எழுதும் இளைஞர் பலர் இன்று கவிதை உலகிலே உலாவரல் கண்டு மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடுகிறது. ஆயினும் கவிதை என்ற பெயரால் உரைநடைகளை எழுதுவது கண்டு அம்மகிழ்ச்சி வற்றி வறண்டு போய் விடுகிறது. வழி தவறிச்செல்லும் அவர்களுக்கு இந்நூல் நேர்வழி காட்ட உற்ற துணையாகும் என்று நம்புகின்றேன்.

அன்பன்
முடியரசன்