118 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
1 தமிழ் வாழ்த்து செந்தமிழே என்னுயிரே புலவர் நெஞ்சில் சேர்ந்தாடும் எழில் மயிலே என்னுட்பொங்கி உந்திவரும் உணர்வதனால் கூவிக்கூவி உவகைதரும் பூங்குயிலே மொழிக் குலத்தில் முந்திவரும் தெய்வமே என்னைச் சூழ்ந்து மொய்த்து வரும் துன்பமெலாம் நீக்கி யின்பம் தந்துவரும் ஆரணங்கே அன்பே நின்றன் தான்வணங்கி நிற்கின்றேன் அருள்வாய் அம்மா. முடியரசன் |