பக்கம் எண் :

146கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

அன்பினைக் கொல்களம் தன்னலம்-அதன்
அடைகுழி ஆசைகொள் புன்மனம்
தன்மையை மாய்ப்பது கள்ளினம்-அதைத்
தாங்கிடும் புதைகுழி பெண்ணலம்.

பண்பினைக் கொல்களம் சூதுகள்-அதன்
படுகுழி யாகிடும் வாதுகள்
மன்பதை சாய்வது மோதலில்-அதன்
மறைகுழி நால்வகை வேதமே.