பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)239

79
இசையால் வந்த மயக்கம்

இசையால் வந்த மயக்கமடி -உன்
இன்பமும் என்னுளம் மறக்குமடி

- இசையால்

பசியோ இல்லை பாயோ தொல்லை
பாலும் பழமும் பார்ப்பதும் இல்லை

- இசையால்

பொருளும் உணர்வும் பொருந்திய பாடல்
பொழுதெலாம் கேட்டால் போகுமே வாடல்
இரவும் பகலும் என்மனம் நாடும்
எத்தனை எத்தனை இன்பங்கள் கூடும்

- இசையால்

குழலோ யாழோ கொடுத்திடும் ஒலியால்
கோதைநின் வாயிதழ் படைத்திடும் குரலால்
அழகோ வியமே அல்லல்கள் பறக்கும்
ஆயிரம் பாடல்கள் என்னிடம் பிறக்கும்

- இசையால்