பக்கம் எண் :

238கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

நீளலைக் கைகளால் தோழி- கொட்டி
    நின்று சிரித்ததே ஆழி
*கேளென நின்றவர் தம்முள்-வந்த
    கீழ்மையைக் கண்டுளம் விம்மும்

அவ்விளை யாட்டினைப் பார்த்தேன்-நாட்டின்
    அரசியல் போக்கையும் பார்த்தேன்
எவ்விதம் வேதனை சொல்வேன்-இந்த
    இழிவினை எப்படி வெல்வேன்!

28.11.1980


*கேளென - உறவென