| பாடுங்குயில் (பாடல்கள்) | 237 |
78 மணல் வீடு வீசும் அலைகடல் ஒரம்-மாலை வெய்யில் குறைகின்ற நேரம் பேசுங் கவிமக ளோடு-நெஞ்சம் பின்னிக் கிடந்தன போடு சின்னஞ் சிறுமியர் கூடி-அங்குச் செய்தனர் ஓர்மணல் வீடு தின்னுங் கறியுடன் சாறு - கூட்டு செய்து வடித்தனர் சோறு வட்டமிட் டொன்றியி ருந்தே-உண்டனர் வாரிப் படைத்தும கிழ்ந்தே எட்டியிருந்துண வுண்ணும்-கெட்ட எண்ணமங் கெப்படி நண்ணும்? மாவிலை தோரணம் உண்டு-நல்ல மாப்பிளை பெண்களும் உண்டு கூவினர் ஆர்த்தனர் கண்டு-மேளம் கொட்டினர் வாயொலி விண்டு எப்படி யோஅவ ரண்டை-சட்டென் றேற்பட்ட தேஒரு சண்டை அப்படி யேமணல் வீடு-தூள்தூள் ஆகிய தேசிறு மேடு |