பக்கம் எண் :

236கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

வண்ணங்கள் எண்ணங்கள் புதிதாகவே
வடிவங்கள் அமையுங்கள் மரபாகவே
எண்ணுங்கள் எண்ணுங்கள் முனியாமலே
எழுதுங்கள் முயலுங்கள் இனியாவது

தனியான மரபுள்ள தமிழாகுமே
தரமான நெறிகொண்ட மொழியாகுமே
இனிதான வழிமாறித் தடுமாறினால்
இனிமேலும் உமைநோக்கி எதுகூறுவேன்?

2.7.1979