பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)235

77
எழுதுங்கள் புதுக்கவிதை

அழகான கவியாக உருவாக்குவோம்
அதனாலே தமிழ்மாதை உயர்வாக்குவோம்
விழலாக வரும்யாவும் எருவாக்குவோம்
விளைவெல்லாம் பயனாகப் பயிராக்குவோம்

உரையான வரியெல்லாம் கவியாகுமோ?
உருவில்லா ஒலியெல்லாம் மொழியாகுமோ?
அரையான வரைகோடு கலையாகுமோ?
அடிபாறை சிறிதானால் சிலையாகுமோ?

மரபோடு வடிவங்கள் தடம்மாறினால்
மதியோடு மனமிங்குத் தடுமாறினால்
பிறவேறு மொழி கூடும்வெறியேறினால்
பிறழ்கின்ற உரையாவும் கவியாகுமோ?

உணர்வோடு கனவாகும் கருயாவுமே
உருவாகி வடிவாகிற் கவியாகுமே?
துணிவோடு வடிவங்கள் கொலையாகுமேல்
தொலையாத பழியாக உமக்காகுமே

மறையாத வடிவங்கள் பலவாக்குவோம்
மரபாக வருமாறு கலையாக்குவோம்
குறையோடு திரிகின்ற நிலைபோக்குவோம்
குலமான கவிவாணர் பழிநீக்குவோம்