பக்கம் எண் :

234கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

76
அழகிய மணவாளன்

அவர்போல மணவாளன் யாரடி?-என்றன்
ஆரணங்கே உண்டென்றால் கூறடி

- அவர்

கவர்கின்ற மொழிபேசும் சொல்லழகன்-என்பால்
காலமெ லாம்பொழியும் அன்பழகன் - ஆணழகன்

- அவர்

உறவாடி மகிர்வூட்டும்குணத்தழகன்-கொள்கை
உரமேறி நிற்கின்ற மனத்தழகன் (பொன்)
நிறமான உடலாலே வனப்பழகன்-என்றன்
நிழலான அவர்தானே எனக்கழகன்-அழகன்

- அவர்

பழியேதுங் காணாத நடையழகன்-நல்ல
பால்போலும் நிறமான உடையழகன்
மொழியாலே போராடும் படையழகன் -பகைவர்
முகம்நாண உரையாடும் விடையழகன்

- அவர்

1.7.1979