| பாடுங்குயில் (பாடல்கள்) | 233 |
75 காதல் இலக்கணம் இதுதான் காதல் இலக்கணமோ?-தோழி இடர்தான் பயனாய் வெளிப்படுமோ?
- இதுதான் எதுநான் செயினும் எனையே மறப்பேன் ஏதும் புரியாமல் தனியே விழிப்பேன்
- இதுதான் புனலாட மனமில்லை துயிலாட வழியில்லை புலந்தாட அவரில்லை புகுந்தாட மகிழ்வில்லை கனலாடும் நிலவுண்டு கனவாடும் இரவுண்டு கடுகேனும் உணவுண்ணக் கருதாத வயிறுண்டு
- இதுதான் பிரிவாலே துயருண்டு பிறழ்கின்ற உடலுண்டு பேணாத குழலுண்டு சூடாத மலருண்டு வருவாரோ எனஎண்ணி மயலாடும் மனமுண்டு மணவாளன் தனைக்காணத் *தணவாத உயிருண்டு
- இதுதான் 30.6.1979
* தணவாத - பிரியாத |