பக்கம் எண் :

28கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

வாரி முகந் தெடுத்தே - இன்ப
    வாரி திளைப் பதற்கே
நேரிய செல் வங்கள்தாம் - தொகையில்
    நேடித் திரட்டி வைத்தாய்

ஐவகைக் காப் பியமாம் - செல்வம்
    ஆக்கி எனக் களித்தாய்
கைதவக் கள் வரினால் - இரண்டு
    காப்பியம் கா ணுகில்லேன்

பாட்டிசைச் செல் வங்களும் - இழந்தேன்
    பட்டயம் மட் டுமுண்டு
நாட்டினில் முன் பிறந்தோர் - அயர்வால்
    நானவை காண் கிலனே

இத்தனை போய் விடினும் - இன்னும்
    எட்டுத் தொகை யுடனே
பத்தெனும் பாட் டுளதாம் - ஒவ்வொன்றும்
    பற்பல கோடி யன்றோ!

பாட்டுப் புறப் பொருளால் - வீரப்
    பாங்கில் எனை வளர்த்தாய்
ஈட்டும் அகப் பொருளால் - காதல்
    இல்லறம் கூட் டுவித்தாய்

நின்பெயர் காத் திடுவேன் - தமிழே
    நீஎனைப் பெற் றதனால்
உன்பெயர் ஓங் குதற்கே - பற்பல
    ஓவியம் நான் படைப்பேன்.