15 தமிழ் - என் தந்தை - முன்னைத் தமிழ் மொழியே! - உலகில் மூப்பறி யா முதலே! என்னை மகன் எனவே - புவியில் ஏற்றமுடன் அளித்தாய் கற்றுத் தெளி வதற்கே - ஆசான் கண்டு பயிற் றுவித்தாய் முற்றும் உணர்ந் தவனாம் - அந்த முன்னவன் வள் ளுவனாம் முத்தமிழ் வா ணர்கள்சூழ் - அவையில் முந்தி யிருந் திடவே அத்தனே என்னை யுமோர் - சான்றோன் ஆக்கி மகிழ்ந் தனைநீ தூது கலம் பகமாய்ப் - பெருகும் தோழர்கள் பற் பலராம் தீது விளைப் பவராய் - அமையின் செப்பித் திருத் துவைநீ குற்றமொன் றில் லதுவாம் - நல்ல கோல மனை யளித்தாய் கற்றவன் கட் டியதே - அதுதொல் காப்பியம் என் பதுவே |