பக்கம் எண் :

42கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

25
தாயகம் காப்போம்

-
எடுப்பு

பாதை தெரிவது பார் பார் - அந்தப்
பாதையில் எதிர்ப்பவர் யார் யார்?

-பாதை

தொடுப்பு

தாதையர் ஆண்ட தாயகம் காத்திடத்
தாரணி யாளும் உரிமையை மீட்டிடப்

-பாதை

முடிப்பு

வஞ்சகர் செயல்கள் வாழ்ந்ததும் இல்லை
வாய்மைகள் என்றும் மாய்ந்ததும் இல்லை
நஞ்சினும் கொடியோர் நன்றியைக் கொன்றோர்
நடத்திடும் நாடகம் இனிமேல் இல்லை

-பாதை

இழந்ததை மீட்போம் இருப்பதைக் காப்போம்
எதிரிகள் செய்திடும் சூழ்ச்சியை மாய்ப்போம்
விழுந்தவர் எழுந்தார் விழித்தனர் மாந்தர்
வீணரின் செயல்களை வேரொடு சாய்ப்போம்

-பாதை