44 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
27 நாட்டுப்பண் - (சனகண இசையிற் பாடுக) உயிருடல் பொருள்திரு நாடெனும் நினைவே ஓங்கிட வேண்டுவம் நாமே துஞ்சாது நின்று குலையாம லிந்நாட்டைத் தோழமை கொண்டுல காள்வோம் நெஞ்சு கெடாவகை உரமாய் நின்றால் நிற்பவர் எதிரில் உளரோ? படைபலம் நாமே பாரீர்! தடைகளை நீக்கிட வாரீர்! நாமே தமிழுல காள்வோம்! புகழ்வளர் நம்முயர் தாயக நினைவே போற்றுவம் போற்றுவம் நாமே நலமே மிகவே பெறவே பலபல நல மிக வே |