சினந்தேன்நீ உண்ணுகிற போது - சோற்றைச் சிதறினாய் வீடெங்கும் என்றறிந்த போது மனம்போன போக்கிலுனை வைதேன் - பிள்ளை மனநிலையை அறியாதிக் குற்றங்கள் செய்தேன் குற்றம் பொறுப்பாய் என் கண்ணே - எனநான் கூறுவதை அறியாய்நீ புரியாய்என் கண்ணே செற்றம் தவிர்ந்தேன்என் கண்ணே - நாளை செல்வமே உன்னோடு விளையாடு வேனே |