68 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
46 செற்றம் தவிர்ந்தேன் - அடஞ்செய்தாய் நீஎன் றடித்தேன் - பின்னர் அழுகின்ற கண்கண்டு நெஞ்சந் துடித்தேன் குடங்கையில் கன்னத்தைச் சேர்த்துத் - துயில்வாய் குறுநெற்றி எழில்காட்டும் மேலாக வேர்த்து கண்ணீர் வழிந்துலரும் கன்னம் - நெஞ்சைக் கலக்குவதை யறியாய்நீ கண்ணயர்ந்த பின்னும்; தண்ணீர் நிறைந்தகுளத் தோரம் - நின்று தாவிக் குதித்துவிளை யாடினையிந் நேரம் துள்ளித் திரிந்துவிளை யாடி - கெட்ட துட்டத் தனம்புரியும் சிறுவரொடு கூடிப் பள்ளிக்குப் போகாமல் நின்றாய் - கண்ட பலகாரப் பொருளைநீ வாங்கியே தின்றாய் பாடம் படிக்கின்ற வேளை - விட்டாற் பயனுண்டோ ஆசானுக் கென்சொல்வாய் நாளை? ஓடும் படிக்கான செல்வம் - அன்றாம் ஓதித் தெளிந்துணரும் நிலையான கல்வி சட்டையை அழுக்காக்கி விட்டாய் - நோய்க்குச் சாருமிடம் நீதந்து மேனிநலம் கெட்டாய் பட்டம்விட் டாடுகிறபோது - செய்தாய் பக்கத்து வீட்டுக் குழந்தையொடு வாது |