54 விடுதலை வேண்டும் - வேண்டும் விடு தலையே - எனக்கு வேண்டும் விடுதலையே யாண்டும் பறந் திடுவேன் - வானில் யாவையும் கண்டிடுவேன் வண்ணப் பசுங் கிளியைச் - சிறையில் வாட்டி வதக்குவதோ சின்னஞ் சிறியவரும் - என்றன் சிந்தையைத் தேக்குவதோ என்னினம் வாழ்ந்திடவும் - செந்தமிழ் ஏற்றம் மிகுந்திடவும் மன்னுயிர்த் தா யகமே - உலகில் மாட்சிமை பெற்றிடவும் பாடுவ தென் தொழிலாம் - இதற்குப் பற்பல ஊறுகளோ! நாடு மொழி இனமே - உயர நாடுவ தோர்குறையோ? வீணரின் கூச் சலினால் - உரிமை வேட்கை தணிந்திடுமோ? கோணல் நரிக் குணத்தால் - பாயும் கோளரி அஞ்சிடுமோ? |