80 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
53 ஏழையைக் கண்டிலேன்! - கல்லைக் கனிய வைத்தான் - அங்கே கற்பனை தேக்கி வைத்தான் சொல்லத் துடிதுடித்தே - கவிதை துள்ளிக் குதித்ததடா! உண்ணவும் நேர மிலான் - சற்றே ஓய்வும் ஒழிவு மிலான் எண்ண மெலாங் குவிய - நெஞ்சில் ஏக்கம் நிறைந்ததடா! ஐந்து விர லிடையே - சிற்றுளி ஆடித் திரிந்ததடா! அந்த நடந் தனிலே - அவன்விழி ஆழ்ந்து பதிந்ததடா! எண்ணமும் சிற்றுளியும் - பெற்ற ஏந்திழைப் பெண்ணொருத்தி வண்ண முகங் காட்டிச் - சிற்ப வாழ்வினைக் கொண்டுநின்றாள் மங்கையைப் போற் றிடவே - பளிங்கு மாளிகை கட்டி வைத்தார் எங்கும் அவள் புகழே - கண்டேன் எத்தனை விந்தையடா! மங்கைக்கு வாழ்வளித்த - சிற்பி மாய்ந்து மறைந்துவிட்டான் எங்கெங்குத் தேடினுமே - அந்த ஏழையைக் கண்டிலனே! |